ஸ்கூட்டர் இருக்கைக்குள் புகுந்த பாம்பு

ஸ்கூட்டர் இருக்கைக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2023-08-30 19:57 GMT

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் பார்சல் அலுவலகம் அருகே ரெயில்வே ஊழியர்கள் மற்றும் கார்டு புக்கிங் அலுவலகம் உள்ளது. நேற்று இரவு இந்த அலுவலக வளாகத்தையொட்டியுள்ள முட்புதரில் இருந்து இரைத்தேடி கொண்டு வெளியே வந்த பாம்பு ஒரு தவளையை வாயில் கவ்விக்கொண்டு திடீரென அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ஸ்கூட்டரின் இருக்கைக்குள் புகுந்தது. இதைக்கண்ட வாலிபர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். மாவட்ட உதவி அலுவலர் சத்தியவர்த்தனன் தலைமையில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஸ்கூட்டரை கீழே சாய்த்து பாம்பை வெளியேற்ற முயற்சித்தனர். ஆனால் நீண்டநேரமாக முயற்சித்தும் அந்த பாம்பு வெளியே வரவில்லை. இதையடுத்து சிறிதளவு மண்எண்ணெயை ஸ்கூட்டரின் இருக்கைக்குள் பாம்பு புகுந்த இடத்தில் ஊற்றினர். உடனே பாம்பு வெளியேறி வேகமாக ஊர்ந்து சென்றது. உடனே தீயணைப்புவீரர்கள் பாம்பை பிடித்து ஒரு பையில் போட்டு வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்