தனியார் அலுவலகத்தில் புகுந்த பாம்பு
திண்டுக்கல் அருகே தனியார் அலுவலகத்தில் பாம்பு புகுந்தது.
திண்டுக்கல் பொன்னகரம் அருகே ராஜலட்சுமி நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது58). இவர் திண்டுக்கல்-திருச்சி சாலையில் கே.ஆர்.நகரில் மாத இதழ் அலுவலகம் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது அலுவலகத்தில் நேற்று ஒரு பாம்பு புகுந்தது. இதைப்பார்த்த ராமகிருஷ்ணன் திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து அலுவலகத்தில் பதுங்கி இருந்த பாம்பை பிடித்தனர். பிடிபட்டது 8 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஆகும். அதனை வனப்பகுதியில் கொண்டு போய் தீயணைத்துறையினர் விட்டனர்.