வீட்டிற்குள் புகுந்த பாம்பு
வாய்மேடு அருகே வீட்டிற்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்;
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த தகட்டூர் நடுக்காடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது வீட்டில் நேற்று மதியம் சாரை பாம்பு ஒன்று வீட்டிற்கு பின்புறம் உள்ள கொட்டகைக்குள் புகுந்துள்ளது. இதனை கண்ட கோவிந்தராஜ் உடனடியாக வாய்மேடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வாய்மேடு தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ஜெயக்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வீட்டின் பின்புறம் கொட்டகையில் புகுந்த சாரை பாம்பை பிடித்தனர்.