திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் தேரோடும் வீதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. அதனைக் கண்டு வங்கி ஊழியர் உடனடியாக வங்கியின் மேலாளரிடம் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் வங்கியிலிருந்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் திருப்பத்தூர் நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான பேரிடர் மீட்பு குழுவினர் வங்கிக்கு உடனடியாக விரைந்து வந்து வங்கியின் முன்புற வாசல் பகுதியில் ஏ.டி.எம். பகுதியில் வெளிப்புறத்தில் ஒரு மூலையில் இருந்த சாரை பாம்பை பிடித்தனர். பின்னர் திருப்பத்தூர் வனத்துறை அலுவலகத்தில் பாம்பினை ஒப்படைத்தனர்.
அதேபோல் திருப்பத்தூரில் மேஸ்திரியார் தெரு பகுதி உள்ள ஒரு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திற்குள் பாம்பு இருந்துள்ளது. அதனை கண்ட அந்த வாகன ஓட்டி திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் அந்த இருசக்கர வாகனத்தில் இருந்த பாம்பை மீட்டு வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்