கால்வாயில் சிறுபாலம் கட்ட வேண்டும்

சிறுபாலம் கட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-10-30 13:05 GMT

வாலாஜா பெல்லியப்பாநகர் அவ்வை தெருவில் சாலையின் குறுக்கே உள்ள கால்வாய் மீது இருந்த பாலம் உடைந்துள்ளது. இதனால் அந்த வழியாக மோட்டார்சைக்கிள்கள், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியவில்லை. அந்த வழியாக மக்கள் சென்று வர சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி கால்வாய் மீது சிறுபாலம் கட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்