உடல் பரிசோதனைக்கான மருத்துவ முகாமுக்கு சென்ற மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
மருத்துவ முகாமில் உடல் பரிசோதனைக்கான எந்த கருவிகளும் இல்லாததால், அங்கு வந்த மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.;
திருச்சி,
மணப்பாறை அடுத்த எப்.கீழையூரில் இருக்கு கிராம ஊராட்சி சேவை மையத்தில் மருத்துவ முகாம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழு உடலை பரிசோதனை செய்ய 10 வயதானவர்களுக்கு 400 ரூபாய்,10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 500 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பரிசோதனைக்கு முன்பதிவு செய்ய தனியே 30 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பை நம்பி முன்பணம் செலுத்தியவர்கள் உடல் பரிசோதனை சென்றுள்ளனர். ஆனால், உடல் பரிசோதனைக்கான எந்த மருத்துவ கருவிகளும் இல்லாததால், சந்தேகமடைந்த கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அதனடிப்படையில் அங்கு விரைந்த போலீசார், மருத்துவ பரிசோதனை செய்வதாக கூறிக் கொண்டிருந்த 3 பேரை கைது செய்தனர். விசாரணையில் அனுமதி இன்றி மருத்துவ முகாம் நடத்தியதும், மக்களை ஏமாற்றி பணம் பறித்ததும் அம்பலமானது.