கோவில்பட்டி ரெயில்வே சுரங்கபாதையின் இருபுறமும் சர்வீஸ்ரோடு அமைக்க வேண்டும்

கோவில்பட்டி ரெயில்வே சுரங்கபாதையின் இருபுறமும் சர்வீஸ்ரோடு அமைக்க வேண்டும் என ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தி உள்ளார்.

Update: 2022-08-26 16:06 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நேற்று

மாலையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தூத்துக்குடி மண்டல தலைவர் எம்.ராதா கிருஷணன் தலைமை வகித்தார். மாநில இணை செயலாளர்

வெங்கடேஷ் வரன், வடக்கு மாவட்ட தலைவர் அசோகன், கன்னியாகுமரி மண்டல தலைவர் வைகுண்ட ராஜா, தென்காசி மாவட்ட பொருளாளர் கலை

வாணன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா பேசுகையில், கோவில்பட்டி மெயின் ரோட்டில் ஓடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பின்பு ஓடையை தூர்வாரி, சிமிண்டு கான்கிரீட் தளம், தடுப்பு சுவர் கட்டி, பொது மக்கள் செல்வதற்கு வசதியாக பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

மாதாங்கோவில் சந்திப்பில் உள்ள பாலத்தை விரிவாக்கம் செய்து, ரோடு பணியை முடிக்க வேண்டும். புதுரோட்டில் ரோடு போடும் பணியை தொடங்கி, சாலையின் இரு புறமும் மின் விளக்கு வசதிகள் செய்ய வேண்டும்.

இளையரசனேந்தல் ரோட்டில் உள்ள ரெயில்வே சுரங்கவழிப் பாதையில் மழை நேரங்களில் கழிவு நீரும், மழை நீரும் தேங்குவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதை போக்குவதற்கு ரோட்டின் இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்கும் பணியை துரிதப்படுத்தி முடிக்க வேண்டும், என்றார்.

கூட்டத்தில் கடலை மிட்டாய் உற்பத்தி யாளர்கள் மற்றும் விற்பனை யாளர்கள் சங்க தலைவர் கார்த்திஸ்வரன், லாலா மிட்டாய் கடை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ரவி மாணிக்கம், காளியப்பன், முத்துராஜா, மோகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்