இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.;

Update:2023-10-20 00:15 IST

முதுகுளத்தூர், 

முதுகுளத்தூர் அருகே உள்ள தேவர் குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் திவ்யபிரியா(வயது 20). இவருக்கும், இளஞ்செம்பூர் கிராமத்தை சேர்ந்த தனது அத்தை மகனான முகேஷ் என்பவரை கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்தார். இந்நிலையில் கணவன், மனைவிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திவ்ய பிரியா கணவரை பிரிந்தார். மேலும் தேவர் குறிச்சி கிராமத்தை சேர்ந்த திருகுமரன் என்பரை 2-வது திருமணம் செய்துகொண்டார். தற்போது திவ்யபிரியா 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

சம்பவத்தன்று பரிசோதனைக்காக மேலசிறுபோது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவர் தனியார் பஸ்சில் சென்றுள்ளார். அப்போது முகேஷ் பஸ்சை வழிமறித்து உள்ளே புகுந்து பஸ்சில் இருந்த திவ்யபிரியாவை அரிவாளால் வெட்டினார். இதை பார்த்து பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து அலறினர். இதையடுத்து முகேஷ் அங்கிருந்து தப்பிவிட்டார். படுகாயம் அடைந்த திவ்யபிரியாவை சக பயணிகள் மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே முகேஷ் இளங்செம்பூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்