வாலிபருக்கு அரிவாள் வெட்டு

நெல்லையில் வாலிபரை அரிவாளால் வெட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2023-05-08 20:10 GMT

மேலப்பாளையம்:

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 32). கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நெல்லை புதிய பஸ்நிலையத்தில் கோவை செல்ல காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ராஜாவின் உறவினரான பாலமுருகன் என்பவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜாவை வெட்டிவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து பெண் விவகாரத்தில் ராஜா வெட்டப்பட்டாரா? என்பது குறித்தும், தப்பிச்சென்றவர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்