வாலிபருக்கு அரிவாள் வெட்டு

சிவகிரி அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2023-07-23 18:48 GMT

சிவகிரி:

சிவகிரி அருகே உள்ள கூடலூர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் ஜெயக்குமார் (வயது 25). இவரது குடும்பத்துக்கும், ராயகிரி இந்திரா காலனியைச் சேர்ந்த முனியாண்டி மகன் முத்துக்கனி (32) என்பவரின் குடும்பத்துக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.

நேற்று முன்தினம் சிவகிரி அருகே உள்ளார் - ராயகிரி நெடுஞ்சாலையில் ஜெயக்குமாருக்கும், முத்துக்கனிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் முத்துக்கனியினை வெட்ட முயன்றார். இதை சுதாரித்துக் ெகாண்ட அவர் அங்கிருந்து தப்பி ஓடினர். எனினும் துரத்திச் சென்று முத்துக்கனியை ஜெயக்குமார் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிவகிரி காவல் நிலையத்தில் முத்துக்கனி புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகச்சாமி வழக்குப்பதிவு ஜெயக்குமாரை கைது செய்தார். புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அசோக் விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்