துணி துவைக்க சென்ற பள்ளி மாணவி குட்டையில் தவறி விழுந்து சாவு

துணி துவைக்க சென்ற பள்ளி மாணவி குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்தார்.;

Update: 2022-09-12 18:32 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள ஒதியம் கிராமம் தேரடி தெருவை சேர்ந்தவர் முத்தமிழ்செல்வன். இவரது மகள் வித்யா(வயது 14). இவர் அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஒதியம் கிராமம் பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள குட்டையில் துணி துவைக்க சென்றார். பின்னர் துணிகளை துவைத்துவிட்டு வீட்டுக்கு திரும்ப காலை கழுவும்போது சறுக்கி குட்டையின் நீரில் விழுந்தார். எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கினார். இதனை அறிந்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக வித்யாவை மீட்டு குன்னம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் வித்யாவின் உடலை உறவினர்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து வித்யாவின் தந்தை முத்தமிழ்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் குன்னம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

மேலும் செய்திகள்