பள்ளி மாணவிக்கு குழந்தை பிறந்தது; சிறுவன் மீது போக்சோ வழக்கு

கூடலூர் அருகே பள்ளி மாணவிக்கு குழந்தை பிறந்தது. இதற்கு காரணமான சிறுவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2023-01-30 18:45 GMT

கூடலூர்

கூடலூர் அருகே பள்ளி மாணவிக்கு குழந்தை பிறந்தது. இதற்கு காரணமான சிறுவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

16 வயது சிறுமி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவரது பக்கத்து வீட்டில் 17 வயது சிறுவன் வசித்து வருகிறான். இவர்கள் 2 பேரும் ஒரே பள்ளியில் முறையே 10-ம் வகுப்பும், 11-ம் வகுப்பும் வருகின்றனர். பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் என்பதாலும், ஒரே பள்ளியில் படிப்பதாலும் 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

இதற்கிடையில் அந்த சிறுவன் ஆசைவார்த்தை கூறி சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதனால் அவள் கர்ப்பிணி ஆனாள்.

இதையடுத்து சம்பவத்தன்று அந்த சிறுமி வயிற்று வலியால் துடித்தாள். உடனே குடும்பத்தினர் அவளை மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவளுக்கு அழகான குழந்தை பிறந்தது.

போக்சோ வழக்கு

ஆனால் சிறுமி என்பதால், மசினகுடி போலீசாருக்கு டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, பக்கத்து வீட்ைட சேர்ந்த சிறுவன் ஆசை வார்த்தை கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினாள். இது தொடர்பாக கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் அந்த சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, சிறுவனும், சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். நெருங்கிய பழகியதால் சிறுமி குழந்தை பெற்றெடுத்துள்ளாள். இது தொடர்பான வழக்கில் கைது நடவடிக்கைக்கு அவசரம் காட்டக்கூடாது என்று உயர் அதிகாரிகளால் உத்தரவிடப்பட்டு உள்ளதால், சிறுவன் கைது செய்யப்படவில்லை என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்