குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்ெகட்டுகள் வழங்கும் திட்டம்

ராணிப்பேட்டையில் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்டுகள் வழங்கும் திட்டத்தை கலெக்டர் வளர்மதி தொடங்கி வைத்தார்.;

Update: 2023-06-16 18:35 GMT

ராணிப்பேட்டையில் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்டுகள் வழங்கும் திட்டத்தை கலெக்டர் வளர்மதி தொடங்கி வைத்தார்.

செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கான சிறப்பு உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடுடைய 732 குழந்தைகளுக்கு செரிவூட்டப்பட்ட பிஸ்கெட்டுகள் வழங்கும் திட்டத்தினை மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது :-

ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்களுக்கு வருகை தரும் 56,633 குழந்தைகளில் 54,710 (96.6 சதவீதம்) குழந்தைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் எடை மற்றும் உயரம் அளவீடு செய்யப்பட்டு ஊட்டச்சத்து குறைபாடில்லாமல் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. மேலும், 732 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடு

கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 6 மாதம் முதல் 24 மாத குழந்தைகள் 304 பேருக்கு தலா 15 கிராம் வீதம் ஒரு நாளைக்கு 4 பிஸ்ெகட்கள் என 50 பிஸ்கெட் எண்ணிக்கை கொண்ட 2 பாக்கெட்களும், 2 முதல் 6 வயதுள்ள 428 குழந்தைகளுக்கு தலா 15 கிராம் வீதம் ஒரு நாளைக்கு 2 பிஸ்ெகட்கள் என 50 பிஸ்ெகட் எண்ணிக்கை கொண்ட 1 பாக்கெட்டும் வழங்கப்படுகிறது.

இந்த செரிவூட்டப்பட்ட பிஸ்கெட்டில் புரதச் சத்து, இரும்புச் சத்து, கால்சியம், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், சோடியம், நார்ச்சத்து, கொழுப்புச் சத்து, நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள், மாறுபக்க கொழுப்பு அமிலங்கள், கொலஸ்ட்ராஸ் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்