பொத்தேரியில் பட்டாகத்திகளுடன் வந்து மோட்டார் சைக்கிளில் திருடும் காட்சி
பொத்தேரியில் பட்டாகத்திகளுடன் வந்து மோட்டார் சைக்கிளை திருடிச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.;
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுகுமார். இவர் வழக்கம் போல் தனது வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிள் நிறுத்திவிட்டு தூங்குவதற்காக சென்றார். பின்னர் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது அவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சுகுமார் மறைமலைநகரில் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் பொத்தேரி பகுதியில் பட்டாக்கத்திகளுடன் உலா வந்த 3 வாலிபர்கள் சுகுமாரின் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த காட்சியில் பதிவாகியுள்ள வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.