ஓமலூர் மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

ஓமலூர் மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.;

Update:2022-09-15 18:28 IST

ஓமலூர்,

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த கொங்குபட்டி தொட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் உதயகுமார் (23). உதயகுமார் சேலத்தில் துணி கடையில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் அதே கடையில் வேலை செய்து வந்த சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் மகள் தேவதர்ஷினி (19) என்பவரும் கடந்த நான்கு வருடமாக காதலித்து வந்து உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காதல் ஜோடி வீட்டில் இருந்து சென்று தாரமங்கலம் விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனை அடுத்து ஓமலூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா இரு வீட்டு பெற்றோர்களையும் அழைத்து விசாரணை நடத்தினர். பின்னர் பெற்றோர்களை சமரசம் செய்து உதயகுமார் உடன் தேவதர்ஷினியை அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்