கள்ளக்குறிச்சியில் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சியில் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் ஷ்ரவன் குமாா் தலைமையில் நடைபெற்றது

Update: 2023-01-05 19:00 GMT

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து துறைகள், அலுவலகங்கள், உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள் வாரியாக நிலுவையில் உள்ள வழக்குகள் மீதான நடவடிக்கைகள் குறித்துவிவாதிக்கப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அனைத்துத்துறை அலுவலர்கள் சார்ந்து நிலுவையில் உள்ள வழக்குகளின் நடவடிக்கையை எதிர்கொள்ளுதல் மற்றும் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு மேல் நிலையில் உள்ள உயர் அலுவலர்கள், கீழ்நிலைத்துறைகளில் உள்ள அலுவலர்கள் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் எதிர்தரப்பினராக சேர்க்கப்பட்டுள்ள வழக்குகள் குறித்து மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைள் குறித்து அரசு வக்கீல்களுடன் கலந்தாலோசித்து வழக்குகளை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் அறிவுறுத்தினார்.

இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், திருக்கோவிலூர் கோட்டாட்சியர் யோகஜோதி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்