நலிவடைந்த மருத்துவ சமுதாய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க சங்க கூட்டத்தில் தீர்மானம்

நலிவடைந்த மருத்துவ சமுதாய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-07-05 18:30 GMT

அரியலூர் மாவட்ட மருத்துவர் சமூக முடிதிருத்துவோர் தொழிலாளர் நல சங்க மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அன்பரசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் முகில் தங்கராசு, மாவட்ட தலைவர் செல்லதுரை, மாவட்ட பொருளாளர் கொளஞ்சி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதையடுத்து, ஜெயங்கொண்டம் நகர நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், தலைவராக குழந்தைநாதன், துணை தலைவராக கலியபெருமாள், செயலாளராக முருகவேல், பொருளாளராக முனுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் பிரதி மாதம் அமாவாசை விடுமுறை விடுவதாகவும், உறுப்பினர்கள் அனைவரையும் வாரியத்தில் உறுப்பினராக சேர்ப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அனைத்து உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டை வழங்குவது, முறையாக சந்தா வசூல் செய்து சங்க வளர்ச்சிக்கு பயன்படுத்துவது, மருத்துவ சமுதாய மக்களுக்கு 5 சதவீத இட உள் ஒதுக்கீடு வழங்கவும், நலிவடைந்த மருத்துவ சமுதாய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவும், மருத்துவ சமூக மக்களின் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகிகள், நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்