ஆற்றை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டுகோள்

ஆற்றை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-01-09 20:06 GMT

மழவராயநல்லூர் மருதையாற்று படுகை பகுதிகளில் வன விலங்குகள் தொல்லை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் மருதையாறு தூர்ந்து போன நிலையில் முட்புதர்கள் மண்டி கிடப்பதால், மழை பெய்யும்போது வெள்ள நீர் விவசாய நிலத்தில் புகுந்து சேதம் ஏற்படுத்துகிறது. இதுவும் எங்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. எனவே இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு, ஆற்றை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்றினால் விவசாயம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்