நெல்லையில் 104.6 டிகிரி வெயில் பதிவு

நெல்லையில் நேற்று 104.6 டிகிரி வெயில் பதிவானது. இதனால் மதிய நேரத்தில் அனல் காற்று வீசியது.;

Update:2023-08-18 01:21 IST

நெல்லையில் நேற்று 104.6 டிகிரி வெயில் பதிவானது. இதனால் மதிய நேரத்தில் அனல் காற்று வீசியது.

ஏமாற்றியது மழை

நெல்லை, தென்காசி உள்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது தென்மேற்கு பருவக்காற்றுடன், தென்மேற்கு பருவமழையும் பெய்ய வேண்டிய காலமாகும். ஆனால் இதற்கு மாறாக மழை பெய்யாமல் பொய்த்து போய்விட்டது. இதனால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் வறட்சி நிலவுகிறது.

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் மிக மிகக் குறைந்து பாறைகளாக காட்சியளிக்கிறது. பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து மிகவும் குறைந்து விட்டது. பாபநாசம் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் இந்த அணை நீர்மட்டம் மளமளவென்று சரிந்து வருகிறது.

104.6 டிகிரி

இந்த நிலையில் வறட்சியுடன் சேர்ந்து வெயிலின் தாக்கமும் அதிகமாக உள்ளது. கோடை காலம் மற்றும் அக்னி நட்சத்திர காலம் போல் வெயில் மிகக் கொடுமையாக தாக்கி வருகிறது.

நெல்லை நேற்று அதிகபட்சமாக 104.6 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. இதனால் மதிய நேரத்தில் அனல் காற்று வீசியது. சாலையில் செல்வோர் முகத்தில் வெப்பம் அனலை உமிழ்ந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். பொதுமக்கள் மதிய நேரத்தில் போக்குவரத்தை குறைத்து வீடுகளுக்குள் முடங்கினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்