ஆ.ராசா எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஆ.ராசா எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணியினர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

Update: 2022-09-16 19:00 GMT

இந்து வியாபாரிகள் சங்க மாநில செயலாளர் ஜெகன் தலைமையில் இந்து முன்னணி நிர்வாகிகள் பழனி டவுன் போலீஸ் நிலையத்துக்கு நேற்று வந்தனர். பின்னர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அவர்கள் கொடுத்தனர். அந்த மனுவில், தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில், இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும், மதரீதியாக பகையை தூண்டும் வகையிலும், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் அவர் பேசி இருக்கிறார். அதேபோல் இந்து மத வழிபாடுகளை கொச்சைப்படுத்தி அவமானப்படுத்தி வருகிறார். அதோடு உண்மைக்கு புறம்பான வதந்திகளை மக்களிடம் பரப்பி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி செய்கிறார். எனவே ஆ.ராசா எம்.பி. மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்