கொல்லங்குட்டை கிராமத்தில் ரேஷன் கடை செயல்பட வேண்டும்
கொல்லங்குட்டை கிராமத்தில் ரேஷன் கடை செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தாலுகா சந்திரபுரம் ஊராட்சி கொல்லங்குட்டை கிராமத்தின் பெயரில் ரேஷன் கடை பாரண்டப்பள்ளி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. ஆனால், எங்கள் கிராமத்தில் ரேஷன் கடை இல்லை. நாங்கள் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வேறு ஒரு கிராமத்தில் பொருட்கள் வாங்குகிறோம். அங்கு எப்போது ரேஷன் கடை திறக்கிறது. என்ன பொருட்கள் வழங்குகிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை. எனவே எங்கள் கிராமத்தின் பெயரில் இயங்கும் ரேஷன் கடையை எங்கள் கிராமத்திலேயே செயல்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.