விவசாயிகளுக்கு தீவன புல் விதைக்கரணை வழங்கும் நிகழ்ச்சி

ஒரத்தநாட்டில் விவசாயிகளுக்கு தீவன புல் விதைக்கரணை வழங்கும் நிகழ்ச்சி

Update: 2023-03-08 18:45 GMT

ஒரத்தநாடு:

ஒரத்தநாடு வட்டாரத்தில் வேளாண்மை துறையின் மூலம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் 2022 -23- ம் ஆண்டு திட்டத்தின் கீழ் கறவை மாடுகள் பெற்ற விவசாயிகளுக்கு கம்பு நேப்பியர் தீவனப்புல் விதைக்கரனை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒரத்தநாடு வட்டார ஆட்மா விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் ரமேஷ்குமார் பங்கேற்று விவசாயிகளுக்கு நேப்பியர் தீவனப்புல் விதைக்கரணைகளை வழங்கினார். இதுகுறித்து ஒரத்தநாடு வேளாண்மை உதவி இயக்குனர் விஜயகுமார் பேசுகையில், விவசாயிகளுக்கு தீவனப்புல் கருணை 10 சென்ட் அளவு வயலில் நடுமாறும், மேலும் இந்த தீவனப்புல் 5 ஆண்டு காலம் வரை பயனளிக்க கூடியது என்றும், இதனை பலமுறை வெட்டி கால்நடைகளுக்கு தீவனமாக வழங்கலாம், ஒருமுறை நட்டாலே 5 ஆண்டுகள் வரை விவசாயிகளுக்கு பயனளிக்கும் என்றும், இந்த தீவன புல்களை மாடுகள் விரும்பி சாப்பிடும் என்றும் கூறினார். நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர்கள், ஆட்மா திட்ட அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்