நகராட்சி தூய்மை பணிகளுக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி
சங்கரன்கோவில் நகராட்சி தூய்மை பணிகளுக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.;
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நகராட்சியில் தூய்மை பணிகளுக்காக 15-வது நிதி குழு மானியம் மூலம் 20 பேட்டரி வாகனங்கள் சுமார் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார். ஆணையாளர் சபாநாயகம், சுகாதார அலுவலர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிய பேட்டரி வாகனங்களை நகராட்சி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
இதில் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சரவணன், சிவகிரி சேது சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள் வெங்கட்ராமன், மாரிசாமி, மாரிமுத்து, தி.மு.க.வைச் சேர்ந்த வக்கீல் சதீஷ், வீரமணி, தாஸ், ஜெயக்குமார், பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.