அழகிய மன்னார் ராஜகோபாலசாமி கோவில் ஆடி பிரமோற்சவ விழா தேரோட்டம்

வடக்கு விஜயநாராயணம் அழகிய மன்னார் ராஜகோபாலசாமி கோவில் ஆடி பிரமோற்சவ விழா தேரோட்டம் நடந்தது.;

Update: 2023-08-02 21:01 GMT

இட்டமொழி:

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான வடக்கு விஜயநாராயணம் அழகியமன்னார் ராஜகோபாலசாமி கோவில் ஆடி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் இரவு அன்ன வாகனம், சிம்ம வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், ஆதிசேஷ வாகனம், கருடாழ்வார் வாகனம், யானை வாகனம், புன்னைமர வாகனம், வெள்ளிக்குதிரை வாகனம், பல்லாக்கு வாகனம், தோழிக்கினியான் வாகனங்களில் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 31-ந் தேதி சுவாமிக்கு சிறப்பெடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். பின்னர் ஆதிநாராயணசாமி கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை விஜயநாராயணசாமி தலைமையில் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்