குனியமுத்தூரில் சாலையோர பள்ளத்தில் சிக்கிய தனியார் பள்ளி பஸ்
குனியமுத்தூரில் சாலையோர பள்ளத்தில் தனியார் பள்ளி பஸ் சிக்கியது.;
கோவையில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருவதால் சாலையின் நடுவே தோண்டப்படும் குழிகள் சரி வர மூடாமல் இருப்பதால் விபத்துகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கோவை தெற்கு மண்டலம் 87-வது வார்டு குனிய முத்தூர் பாரதி நகர் பிரதான சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அங்கு சாலையின் நடுவே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதில் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் பலர் விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்த வழியாக குழந்தை களை ஏற்றி வந்த தனியார் பள்ளிக்கூட பஸ் குழியில் சிக்கியது. அந்த பஸ்சின் முன்சக்கரங்கள் மண்ணில் புதைந்தது. இதனால் குழந்தைகள் கூச்சல் போட்டன. ஆனாலும் குழந்தைகள் யாருக்கும் எவ்வித காயமுமின்றி ஏற்பட வில்லை. இதையடுத்து பள்ளத்தில் சிக்கிய பள்ளிக்கூட பஸ் கிரேன் மூலம் மீட்கப்பட்டது.