தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் குத்தி வழிப்பறி
தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் குத்தி வழிப்பறி செய்யப்பட்டது;
தஞ்சையை அடுத்துள்ள சிதம்பரபட்டியை சேர்ந்தவர் எபினேசர் (வயது 30). இவர் வல்லத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வல்லத்திலிருந்து திருச்சி சாலையில் சிதம்பரபட்டிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் வந்த 3 மர்ம நபர்கள் எபினேசரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டினர். அவர் கொடுக்க மறுக்கவே, மர்ம நபர்கள் 3 பேரும் எபினேசரின் வயிற்றில் கத்தியால் குத்தி விட்டு அவர் பையில் வைத்திருந்த ரூ.500-ஐ எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று விட்டனர். கத்திக்குத்தில் காயம் அடைந்த எபினேசரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.