லாரியை முந்தி சென்ற தனியார் பஸ் பள்ளத்தில் சிக்கியது

லாரியை முந்தி சென்ற தனியார் பஸ் பள்ளத்தில் சிக்கியது. பயணிகள் காயமின்றி தப்பினர்.;

Update: 2022-09-03 16:44 GMT

திருப்பத்தூரில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஜோலார்பேட்டை அருகே பக்கிரிதக்கா என்ற இடத்தில் சென்றபோது முன்னால் சென்ற லாரியை பஸ் டிரைவர் முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் பஸ் சிக்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பஸ்சில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர்.

இதனால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கவலறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்தனர் அதன்பின் பள்ளத்தில் சிக்கிய பஸ்சை மீட்டனர். மேலும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் 

Tags:    

மேலும் செய்திகள்