கஞ்சா வழக்கில் போலீசார் கைது செய்தபோது பிளேடால் கையில் கீறிக்கொண்ட கைதி

கஞ்சா வழக்கில் போலீசார் கைது செய்தபோது, கைதி ஒருவர் பிளேடால் கையில் கீறிக்கொண்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.;

Update: 2023-05-20 18:49 GMT

கஞ்சா வழக்கில் போலீசார் கைது செய்தபோது, கைதி ஒருவர் பிளேடால் கையில் கீறிக்கொண்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைதி

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்தவர் சதாம் உசேன் (வயது 29). இவர் கஞ்சா விற்பனை செய்து வந்ததாக கூறி, போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

அவரை பிடிக்க நெல்லை மாநகர தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில், அவர் நெல்லை தச்சநல்லூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

பிளேடால் கீறினார்

இதையடுத்து போலீசார் தச்சநல்லூருக்கு சென்று சதாம் உசேனை கைது செய்து ஜீப்பில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர். சிறிது நேரம் சென்றபோது சதாம் உசேன் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் திடீரென கையை கீறிக் கொண்டார்.

இதில் அவரது கையில் இருந்து ரத்தம் கொட்டியது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவர் மேலும் பிளேடால் கீறிக்கொள்ளாமல் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்