மத்திய சிறைக்கு வந்த கைதிக்கு கொரோனா

மத்திய சிறைக்கு வந்த கைதிக்கு கொரோனா தொற்று உள்ளது.

Update: 2023-04-04 20:17 GMT


மதுரையில் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர், கடந்த 28-ந் தேதி மதுரை மத்திய சிறைக்கு விசாரணை கைதியாக அழைத்து வரப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 2 நாட்களுக்குப்பின் கொரோனா இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மத்திய சிறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மதுரை மத்திய சிறையில் சுமார் 1,800 கைதிகள் உள்ளனர். அவர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு கிடையாது. சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்கு கொண்டு வரப்பட்ட கைதிகளுக்கும் அரசு மருத்துவமனையில் முறையாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு அதன் பிறகு அவர்கள் சிறைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா முடிவு வரும் வரை அவர்கள் சிறையில் தனியாக வைக்கப்படுகின்றனர். அரசு அறிவித்தப்படி இது எப்போதும் கடைபிடிக்கும் நடைமுறையாகும். மேலும் கடந்த 28-ந் தேதி வந்த விசாரணை கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரியவந்தது. அவர் தனியாகத்தான் வைக்கப்பட்டுள்ளார். மேலும் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க மதுரை போலீசாரிடம் வழிக்காவல் கோரப்பட்டு உள்ளது. சிறையில் வேறு யாருக்கும் கொரோனா தொற்று இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்