குடவாசல் அருகே துப்பாக்கியுடன் வங்கியில் புகுந்து மிரட்டிய சாமியாரால் பரபரப்பு...!

குடவாசல் அருகே துப்பாக்கியுடன் வங்கியில் புகுந்து சாமியார் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-09-19 16:17 GMT

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் குடவாசலை சேர்ந்த திருமலை சாமிகள் என்பவர் இடி மின்னல் சங்கம் என்கிற அமைப்பை நடத்தி வருகிறார். இவர் துப்பாக்கியுடன் சென்று மஞ்சக்குடியில் உள்ள சிட்டி யூனியன் வங்கி ஊழியர்களை மிரட்டியுள்ளார். அத்துடன் அங்கேயே அமர்ந்து புகை பிடித்துள்ளார்.

இந்த காட்சிகள் அனைத்தும் அவரது முகநூல் பக்கத்தில் நேரலையில் வெளியாகி உள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக குடவாசல் போலீசார் விசாரணை நடத்தி, சாமியார் திருமலையை கைது செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்