குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறு செய்தபோலீஸ்காரர் பணியிடை நீக்கம்
குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறு செய்த போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.;
விழுப்புரம் மாவட்டம் கெடார் போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருபவர் இளங்கோ. இவர் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது குடிபோதையில், அங்கிருந்த சிலரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அப்பகுதி மக்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவுக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் போலீஸ் அதிகாரிகள், இதுசம்பந்தமாக விசாரணை நடத்தினர்.
விசாரணையில் போலீஸ்காரர் இளங்கோ, குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறு செய்தது தெரியவந்தது. இதுதொடர்பான விசாரணை அறிக்கையை அவர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு சமர்ப்பித்தனர்.
இதன் அடிப்படையில் போலீஸ்காரர் இளங்கோவை துறை ரீதியாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டுள்ளார்.