சமூக பாதுகாப்புடன் கூடிய வேலையை அடிப்படை உரிமையாக்கி சட்டம் இயற்ற வேண்டுகோள்

சமூக பாதுகாப்புடன் கூடிய வேலையை அடிப்படை உரிமையாக்கி சட்டம் இயற்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டது.;

Update: 2023-07-09 18:30 GMT

பெரம்பலூரில் சமூக பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கத்தின் மாவட்ட அமைப்பின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், மத்திய-மாநில அரசுகள் சமூக பாதுகாப்புடன் கூடிய வேலையை அடிப்படை உரிமையாக்கி சட்டம் இயற்ற வேண்டும். குறைந்த பட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். மத்திய-மாநில அரசுகளின் அனைத்து துறை மற்றும் நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு துறைகளில் ஒப்பந்த வேலை முறையை கைவிட்டு நிரந்தர வேலை வாய்ப்பை அமல்படுத்த வேண்டும். பெண்களுக்கான வேலை வாய்ப்பில் கூடுதல் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வேளாண்மை, மீன் பிடி, குடிசை தொழில், சிறு உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு மாவட்ட தன்மைக்கு ஏற்ப விசேஷ தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். வேலையில்லா கால நிவாரண தொகையை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். 100 நாள் வேலைக்கு சட்டப்படி முழுமையான கூலியை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்