சாராயம், மதுபாட்டில்கள் விற்றவர் கைது

சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-01 18:32 GMT

சிதம்பரம், 

சிதம்பரம் நகர போலீசார் பஸ் நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்றிருந்த ஒருவரை போலீசாா் சந்தேகத்தின் போில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் தெருவை சேர்ந்த பாண்டியன் (வயது40) என்பதும், சாராயம் மற்றும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவாிடம் இருந்து 2 லிட்டர் சாராயம், 20 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்