சங்கராபுரம் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

சங்கராபுரம் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டாா்.;

Update: 2023-06-23 18:45 GMT

சங்கராபுரம், 

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி தலைமையிலான போலீசார் நெடுமானூர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது நெடுமானூர் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும் படியாக நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் அதே ஊரை சேர்ந்த காட்டுகொட்டாய் ஏழைபங்காளன் மகன் குமரேசன் (வயது 23) எனபதும், சிறிய பையில் 100 கிராம் எடையுள்ள கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்து, 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்