புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது

திண்டுக்கல் அருகே புகையிலை பொருட்கள் பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-01 15:39 GMT

திண்டுக்கல்லை அடுத்த என்.ஜி.ஓ காலனியில் உள்ள ஒரு வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்துள்ளதாக திண்டுக்கல் தாலுகா போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி தலைமையிலான போலீசார் என்.ஜி.ஓ காலனி பகுதியில் தீவிர சோதனை செய்தனர். அப்போது, கண்ணன் (வயது 49) என்பவரின் வீட்டில் மூட்டை, மூட்டையாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர். பின்னர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 138 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்