பாலத்தில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
பாலத்தில் இருந்து தவறி விழுந்தவர் இறந்தார்.;
நாகமலைபுதுக்கோட்டை
செக்கானூரணி அருகே கே.புளியங்குளத்தைச் சேர்ந்த செல்லக்கண்ணு மகன் இஸ்ரவேல் (வயது 25). இவர் சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் உள்ள கண்மாய் கரை பாலத்தில் அமர்ந்திருந்த போது தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் வீட்டில் இருந்தவாறே சிகிச்சை எடுத்து வந்தார். சில நாட்களில் உடல்நிலை மோசமாகவே மேல் சிகிச்சைக்காக குடும்பத்தினர் அவரை உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே இஸ்ரவேல் இறந்தார். இதுகுறித்து செக்கானூரணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.