திருவிழாவிற்கு வந்தவர் கிணற்றில் மூழ்கி சாவு
திருவிழாவிற்கு வந்தவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார்;
சோழவந்தான்,
சோழவந்தான் அருகே சி.புதூர் கிராமத்தில் திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழாவிற்கு மதுரை சிந்தாமணியை சேர்ந்த கூலி தொழிலாளி தினேஷ்(வயது 35), உறவினருடன் கலந்து கொண்டார். இதையொட்டி அவர் அப்பகுதியில் உள்ள கிணற்றில் உறவினருடன் குளிக்க சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக தினேஷ் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அறிந்த சோழவந்தான் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.