போதை மாத்திரை வைத்திருந்தவர் கைது
போதை மாத்திரை வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
திசையன்விளை:
உவரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நதியா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திசையன்விளை அருகே ஆனைகுடி விலக்கில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர் திசையன்விளை அருகே உதயத்தூரைச் சேர்ந்த தற்போது திசையன்விளை காமராஜ் நகரில் வசித்து வரும் பால்பாண்டி மகன் நவீன்குமார் (வயது 27) என்பதும், போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.