திருப்பூர்
திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் அரசு பஸ் மோதி ஒருவர் பலியானார். இந்த விபத்து குறித்து டிரைவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பஸ் நிலையம்
திருப்பூர் நல்லூரை அடுத்த முத்தனம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலு (வயது 45). இவர் நேற்று முன்தினம் இரவு திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தின் உள்புறம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருப்பூரில் இருந்து கோவைக்கு புறப்பட்டு சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக பாலு மீது பயங்கரமாக மோதியது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஸ் டிரைவரான தாராபுரத்தை சேர்ந்த ஈஸ்வரன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வைரலாகும் வீடியோ
இந்த நிலையில் திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் பஸ் மோதி பாலு உயிரிழந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
---------