கிணற்றில் தவறி விழுந்த மயில் உயிருடன் மீட்பு
பரப்பாடியில் கிணற்றில் தவறி விழுந்த மயில் உயிருடன் மீட்கப்பட்டது.;
இட்டமொழி:
பரப்பாடியில் சேகர் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அங்கு சுமார் 70 அடி ஆழ கிணற்றில் நேற்று ஆண் மயில் ஒன்று தவறி விழுந்து தவித்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் நாங்குநேரி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று கயிறு கட்டி உள்ளே இறங்கி மயிலை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் கூந்தன்குளம் வனக்காப்பாளர் அஜித்திடம் ஒப்படைக்கப்பட்ட அந்த மயில் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் விடப்பட்டது.