சாலையில் நடந்து சென்ற பெண்ணின் தலையில் விழுந்த சிமெண்ட் கலவை எந்திரத்தின் பாகம்...!

குமரியில் சாலையில் நடந்து சென்ற பெண் தலையில் சிமெண்ட் கலவை எந்திரத்தின் பாகம் விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.;

Update: 2023-01-28 10:34 GMT

குமரி,

குமரி மாவட்டம் குழித்துறையில் இருந்த மேல்புறம் செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மேல்புறத்தில் இருந்து குழித்துறை நோக்கி மினி டெம்போ வாகனம், பின்னால் சிமெண்ட் கலவை எந்திரத்தை கட்டி இழுத்து கொண்டு சென்றது.

அப்போது, எதிரே வரும் பஸ்சிற்கு வழி வழிவிடுவதற்காக மினி டெம்போ டிரைவர் வாகனத்தை சாலையோரம் ஒதுக்கியுள்ளார். இதில் குண்டும் குழியுமான சாலையில் வாகனம் இறங்கியதில் மினி டெம்போ வாகனத்தின் பின்னால் கட்டப்பட்டிருந்த சிமெண்ட் கலவை எந்திரத்தின் மேல் பாகம் சாலையில் நடந்து சென்ற லெட்சுமி என்ற பெண்ணின் தலையில் விழுந்தது.

அதில் அவர் படுகாயம் அடைந்த சாலையோரம் மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பிற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் விரைந்து வந்த அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்