எலக்ட்ரீசியனுடன் சென்ற நர்சு விபத்தில் பலி

செஞ்சி அருகே எலக்ட்ரீசியனுடன் சென்ற நர்சு விபத்தில் பலியானாா்.;

Update: 2023-04-15 19:15 GMT

செஞ்சி:

செஞ்சி அருகே உள்ள ஒதியத்தூரை சேர்ந்தவர் பாபு. இவரது மகள் கிறிஸ்டினா (வயது 20). நர்சான இவர், கடந்த 10-ந் தேதி தனது உறவினரான சத்தியமங்கலத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் அந்தோணி ஆல்பர்ட் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் அப்பம்பட்டுக்கு சென்றார். பின்னர், அங்கிருந்து ஒதியத்தூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். கோண ஏரிக்கரை அருகே வந்த போது பாம்பு ஒன்று குறுக்கே சென்றதால் அந்தோணி ஆல்பர்ட் பிரேக் போட்டுள்ளார். அப்போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து இருவரும் கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கிறிஸ்டினா அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகி்ச்சை அளித்தும் பலனின்றி கிறிஸ்டினா பரிதாபமாக இறந்தார். அந்தோணி ஆல்பர்ட் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். விபத்து குறித்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்