விசுவகுடியில் புதிய மின்மாற்றி பயன்பாட்டிற்கு வந்தது
விசுவகுடியில் புதிய மின்மாற்றி பயன்பாட்டிற்கு வந்தது.;
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள விசுவகுடி கிராமத்தில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக பொதுமக்கள் மின் சாதனங்களை இயக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் புதிய மின்மாற்றி அமைத்து தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து விசுவகுடி கிராமத்தில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட மின் பொறியாளர் அசோக்குமார், வேப்பந்தட்டை உதவி மின் பொறியாளர் செந்தில்குமார், மின் ஆக்க முகவர் வேணுகோபால் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.