வடமதுரையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா
வடமதுரையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகாவை உருவாக்க வேண்டும் என்று அய்யலூர் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அய்யலூர் பேரூராட்சி கூட்டம், அதன் தலைவர் கருப்பன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் பாண்டீஸ்வரி, துணைத்தலைவர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அய்யலூர் பேரூராட்சியில் வசிக்கிற 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேடசந்தூர் தாலுகா அலுவலகத்துக்கு சென்று வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி, வடமதுரையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் இளநிலை உதவியாளர்கள் மோகன், அல்லிமுத்து மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.