புதிய தாலுகா உருவாக்க வேண்டும்

சின்னமனூர் ஒன்றியத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்க வேண்டும்;

Update:2023-06-21 00:45 IST

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேனி மாவட்டக்குழு கூட்டம் தேனியில் நடந்தது. இதற்கு தேனி தாலுகா செயலாளர் அரசகுமாரன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ரவி கலந்து கொண்டு மாநிலக் குழு முடிவுகள் தொடர்பாக பேசினார். மாவட்ட செயலாளர் பெருமாள், மாவட்ட துணைச் செயலாளர் பரமேஸ்வரன், மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தங்கம், தமிழ்பெருமாள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். கூட்டத்தில், கம்பம் பகுதியில் இருபாலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஏற்படுத்திட வேண்டும். ஆண்டிப்பட்டி பகுதிகளின் வறட்சியை போக்கும் வகையில் முல்லைப்பெரியாற்றில் இருந்து 19-ம் கால்வாய் திட்டத்தை உருவாக்க வேண்டும்.சின்னமனூர் ஒன்றியத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்க வேண்டும். போடியில் இருந்து மதுரைக்கு பயணிகள் ரெயிலை தினமும் காலையில் இயக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்