செங்கோட்டையில் புதிய விருந்தினர் மாளிகை கட்ட வேண்டும்-அமைச்சரிடம் மனு

செங்கோட்டையில் புதிய விருந்தினர் மாளிகை கட்ட வேண்டும் என்று அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2023-05-24 20:41 GMT

செங்கோட்டை:

குற்றாலத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணிகள் துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் ரஹீம் கோரிக்கை மனு வழங்கினார்.

அதில், ''தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகரில் உள்ள பொதுப்பணி துறை அலுவலக வளாகத்தில் சுமார் 6 ஏக்கர் நிலம் உள்ளது. இங்குள்ள விருந்தினர் ஆய்வு மாளிகை கட்டிடம் மிகவும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே அங்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று நகர பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. இங்கு புதிய ஆய்வு மாளிகை கட்டிடம் அமையும் பட்சத்தில் தென்காசி மாவட்டத்திற்கு வரும் அரசு துறை அதிகாரிகள் தங்குவதற்கு மிகுந்த பயனுள்ளதாகவும் இருக்கும். ஆகவே புதிய ஆய்வு மாளிகை கட்டிடம் அமைவதற்கு ஆவன செய்திட கேட்டு கொள்கின்றேன்'' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்