இந்திய கைப்பந்து முன்னாள் பயிற்சியாளருக்கு மோட்டார் பொருத்திய சக்கர நாற்காலி
இந்திய கைப்பந்து முன்னாள் பயிற்சியாளருக்கு மோட்டார் பொருத்திய சக்கர நாற்காலியை கலெக்டர் வழங்கினார்.
திருப்பத்தூர் தாலுகா கதிரிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 58), இந்திய கைப்பந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் முதுகுத்தண்டு பிரச்சினை காரணமாக நடக்க முடியாமல் போனது.
இதனையடுத்து அவருக்கு அதிநவீன மோட்டார் பொருத்திய சக்கர நாற்காலி சி.என்.அண்ணாதுரை எம்.பி. நிதியில் இருந்து வழங்கப்பட்டது.
இதனை கலெக்டர் அமர்குஷ்வாஹா, வெங்கடேசனுக்கு வழங்கினார். அப்போது ஆவின் தலைவர் எஸ்.ராஜேந்திரன், நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் பாலாஜி மற்றும் பலர் உடன் இருந்தனர்.