மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை; கல்லூரி மாணவிகள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை; கல்லூரி மாணவிகள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு.

Update: 2022-10-28 23:20 GMT

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரசு பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற தற்போது கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவிகள் http://www.pudhumaipenn.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நவம்பர் 1-ந்தேதி தொடங்கும் விண்ணப்பபதிவு 11-ந்தேதி முடிவடைகிறது. மாணவிகள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தற்போது 2, 3 மற்றும் 4-ம் ஆண்டு படித்து வரும் மாணவிகள் ஏற்கனவே விண்ணப்பிக்க தவறியிருந்தால் தற்போது விண்ணப்பிக்கலாம்.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாணவிகள் ஆதார் அட்டை, மாற்று சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இதுதொடர்பாக மேலும் விவரங்கள் அறிய சமூகநல இயக்குனரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்