பழங்காலத்தில் பச்சைக்குத்த பயன்படுத்திய அச்சு
பழங்காலத்தில் பச்சைக்குத்த பயன்படுத்திய அச்சு அகழாய்வில் கிடைத்தது;
தாயில்பட்டி,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல்குளத்தில் 2-ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. வித்தியாசமான பல பொருட்கள் இந்த அகழாய்வில் கிடைத்து வருகின்றன.
நேற்று அங்கு தோண்டப்பட்ட அகழாய்வு குழியில் வட்டச்சில்லு போன்ற ஒரு பொருள் கிடைத்தது. அது சுடு மண்ணால் செய்யப்பட்டதாகும். அதை உற்றுப்பார்த்தால், ஒரு காம்பில் இருபுறமும் வரிசையாக இலைகள் உள்ளது போன்று பதிவாகி இருந்தது.
இதுகுறித்து தொல்லியல்துறை இயக்குனர் பொன் பாஸ்கர் கூறும்போது, இலைகள் பதிவாகி உள்ள
இந்த வட்ட அச்சு, முற்காலத்தில் பச்சைக்குத்த பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். உடலில் கைகள் போன்ற இடங்களில் இதை ஒருவித மூலிகை சாறு போன்ற மையில் தடவி பச்சைக்குத்தி இருக்கிறார்கள்.
எனவே பழங்காலத்திலேயே பச்சைக்குத்தும் பழக்கம் இருந்துள்ளது" என்றார்.