மதுவில் விஷம் கலந்து குடித்து வியாபாரி தற்கொலை
ஆத்தூர் அருகே கடன் தொல்லையால் மதுவில் விஷம் கலந்து குடித்து வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.;
ஆத்தூர்:
வியாபாரத்தில் நஷ்டம்
ஆத்தூர் அருகே உள்ள கல்பகனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் சின்னத்தம்பி (வயது 39). இவருடைய மனைவி சித்ரா தேவி. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
இவர் ஆத்தூர் அருகே உள்ள காட்டுக்கோட்டையில் நெல் கதிர் அடிக்கும் எந்திரங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இந்த வியாபாரத்தில் சின்னத்தம்பிக்கு நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த சில மாதங்களாக கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை
இதனால் மனவேதனை அடைந்த சின்னத்தம்பி நேற்று முன்தினம் இரவு ஆத்தூர் அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை அருகே மதுவில் விஷத்தை கலந்து குடித்து விட்டார்.
பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சின்னத்தம்பி மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர் ஆனால் வழியிலேயே இறந்து விட்டார்.
வியாபாரி சின்னத்தம்பி மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஆத்தூர் ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.